சீனாவில் மீண்டும் தலையெடுக்கும் கொரோனா..24 மணி நேரத்தில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.அவர்களில் 113 பேர் அறிகுறியற்ற கொரோனா நோயாளர்கள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது முந்தைய நாளில் பதிவுசெய்யப்பட்ட 103 புதிய அறிகுறிகளுடைய தொற்றாளர்கள் மற்றும் 58 அறிகுறியற்ற தொற்றாளர்களில் இருந்து அதிகரித்துள்ளது. குறித்த தொற்றாளர்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் நாளாந்த கொரோனா வைரஸ் தரவுகளின் படி, வடக்கு ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான அறிகுறிகளுடைய 68 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.அருகிலுள்ள மாகாணங்களான ஜிலினில் 33 பேரும், ஹெபீயில் 20 பேரும் பதிவாகியுள்ளனர்.இவர்களில் 18 அறிகுறிகளுடைய தொற்றாளர்களும், 16 அறிகுறியற்ற தொற்றாளர்களும் வெளிநாடுளில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து சீனாவில் மொத்தம் 88,701 பேர் தொற்றுக்குள்ளானதோடு 4,635 பேர் உயிரிழந்துள்ளார்கள்.சீனாவில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தொற்று நோய் பரவல் அதிகரித்து வருவதால், நாட்டின் வடகிழக்கின் பெரிய நகரங்களில் ஊரடங்கு 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.தலைநகரான பீஜிங்கைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம், அதன் முக்கிய நகரமான ஷிஜியாஜுவாங் தலைநகருடன் அனைத்து போக்குவரத்து வழிகளையும் மூடியுள்ளது.பாதிப்புக்குள்ளான பகுதிகளின் முக்கிய நகர மையங்களில் சுகாதார அதிகாரிகள் மாபெரும் பரிசோதனை திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.