சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து, அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாராவின் கொரோனா பாணியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரம் குறித்து, சுகாதார அமைச்சு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.