எம்பிலிப்பிட்டிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிறப்பாக நடந்த பூப்புனித நீராட்டு விழா..!!

எம்பிலிப்பிட்டிய கொரோனா சிகிச்சை மையத்தில் பூப்பெய்திய சிறுமியொருவருக்கு, அந்த மையத்திலேயே சடங்கு நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எம்பிலிப்பிட்டிய யோதகம புதிய நகரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி 16 ஆம் திகதி பருவமடைந்தார்தனது தாய், மற்றுமொரு குடும்ப உறுப்பினருடன் சிறுமி தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.தாத்தா உள்ளிட்ட மேலும் 3 குடும்ப உறுப்பினர்கள் கஹவட்ட சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.அவர் தனது தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கோவிட் சிகிச்சை மையத்தில் ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.சிறுமி பூப்பெய்தியதும் தாதியர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதும், அவர்கள் சடங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.20 ஆம் திகதி காலையில் சுப தருணத்தில் சிறுமியை குளிப்பாட்டி, அனைத்து சடங்கும் நடத்தப்பட்டது. சிகிச்சை மையத்தில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், நோயாளிகள் எனப் பலர் இதில் கூடியிருந்தனர்.கஹவட்ட தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த குடும்ப உறுப்பினர்களும் அங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.