தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா..!!

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபை – புத்தளம் சாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா நகர கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 20 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 274 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர்,அண்மையில் வீடு திரும்பினார்.அவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மாதிரிகள் பெறப்பட்டு இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.அவருக்கு தொற்று உள்ளது என்று அறிக்கை கிடைத்துள்ளது.அத்துடன், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 154 பேரின் மாதிரிகள் சிறி ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.அவர்களில் 20 பேருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தபட்டுள்ளது