நன்றி மறக்காத ஐந்தறிவு ஜீவன்..!! தினமும் வீடு தேடி வந்து மகிழ்விக்கும் கண்கொள்ளாக் காட்சி..!! பெரும் நெகிழ்ச்சியில் உரிமையாளர்..!

கேரளாவில் பருந்து ஒன்று ஒருவரை அடிக்கடி பார்க்க வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தொண்டிமால் என்ற பகுதியை சேர்ந்தவர் சுனீத். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காக்கைகளால் தாக்கப்பட்ட பருந்து ஒன்று காயத்துடன் சாலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த சுனீத், அந்த பருத்தை வீட்டுக்கு எடுத்து வந்து காயத்துக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனை அடுத்து தினமும் மாட்டிறச்சி, மீன்கள் உள்ளிட்ட உணவை பருத்துக்கு சுனீத் வாங்கிக் கொடுத்துள்ளார்.இதனால், வீட்டில் உள்ளவர்களுடன் பருந்து நன்றாக பழக ஆரம்பித்துள்ளது.ஒரு கட்டத்தில் முழுவதும் குணமடைந்த பருந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தாக்கியுள்ளது.இதனால், காட்டுக்குள் சென்று பருந்தை விட்டுள்ளார். இந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து திடீரென சுனீத்தின் வீட்டுக்கு மீண்டும் அந்த பருந்து வந்துள்ளது.இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சுனீத், பருந்துக்கு பிடித்த மாட்டிறைச்சியை கொடுத்துள்ளார். அன்றிலிருந்து தினமும் சுனீத்தின் வீட்டுக்கு வந்து செல்வதுமாக பருந்து உள்ளது. லொக்டவுணுக்கு முன்பு வெகுதொலைவில் உள்ள மஞ்சேரி பகுதிக்கு கொண்டு சென்று பருத்தை விட்டுள்ளார்.ஆனால், நன்றி மறக்காமல் மீண்டும் வீடு தேடி வந்தது ஆச்சரியமாக உள்ளதாக சுனீத் தெரிவித்துள்ளார்.