பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை..!! கைக்குழந்தையுடன் தெருவுக்கு வந்த குடும்பம்..! இலங்கையில் நடந்த கலங்க வைக்கும் நிகழ்வு!!

நீர்கொழும்பு மோரவல பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டதன் காரணமாக தனது வீட்டை இழந்த நிலையில் தற்காலிகமாக கொட்டகை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வீடு உடைத்து அகற்றப்பட்டதன் காரணமாக அந்தக் குடும்பம் நிர்க்கதியாகியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்த தகரக்கொட்டகை உடைக்கப்பட்டது.இதன்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்த எல்லோரினதும் மனதை கலங்க வைத்தது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,நீர்கொழும்பு தலாதூவ கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகர் அலுவலகம் முன்பாக களப்பு அருகில் உள்ள அரச காணியில் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்ப தற்காலிகமாக கொட்டகை அமைத்து வாழ்ந்துள்ளனர்.கே.எம். சுஜித் நாமல் பெர்னாந்து என்பவரின் குடும்பமே இந்த அவல நிலைக்கு ஆளாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.எமது வீடு பிட்டிபனை மோரவல கடலோரப் பிரதேசத்தில் மையவாடி அருகில் அமைந்திருந்தது.எமது வீட்டுக்கு காணி உரிமப் பத்திரமும் உள்ளது.கொழும்பு துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக மோரவல கடலோரத்திலும் கடரிப்பு ஏற்பட்டது.2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கடலரிப்பு ஏற்பட்டது.கடலோர முகாமைத்துவ திணைக்களம் எங்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு எழுத்து மூலமாக அறிவித்தது.இதன் காரணமாக நாங்கள் அங்கிருந்து அகன்று உறவினர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்தோம். பின்னர் அந்த வீட்டிற்கு அவர்கள் குடிவந்ததன் காரணமாக அங்கிருந்து அகன்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் தலாதூவ பிரதேசத்தில் களப்பு அருகில் உள்ள அரச காணியில் தகரத்தினால் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகிறோம்.இங்கு தண்ணீர் மற்றும் மலசகூட வசதிகள் கிடையாது.அயலில் உள்ள வீடுகளுக்கே அதற்காக செல்கிறோம். நீர்கொழும்பு பிரதேச செயலாளருக்கு அறிவித்தோம்.அவர் எமது நிலையை ஏற்று இங்கு வசிப்பதற்கு வாய்மொழி மூலமாக அனுமதி அளித்தார.ஆயினும் இந்த பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் எம்மை இங்கிருந்து அகற்றுவதற்காக கடலோர முகாமைத்துவ திணைக்களத்திற்கு அறிவித்தார். இதனை அடுத்து, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை பெற்று, எம்மை இங்கிருந்து செல்லுமாறு அறிவித்து வீட்டை அகற்றியுள்ளனர்.எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்று பிள்ளைகள் பாடசாலையில் கற்கின்றனர். இரண்டரை வயது குழந்தையும் உள்ளது. மூத்த மகள் உயர்தர வகுப்பில் கல்வி கற்கின்றார்.எமக்கு ஏற்பட்ட நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி எமக்கு உதவிபுரிய வேண்டும்.எமக்கு இந்த இடத்திலேயே வீடோன்றை அமைப்பதற்கு அனுமதி தந்தால், அதுவே போதுமானது. என்று தெரிவித்தார்.தற்போது அந்த குடும்பத்தினர் உடைக்கப்பட்ட வீடு அமைந்துள்ள காணியிலேயே கூடாரம் ஒன்றை அமைத்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.