இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்!!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (21) அறிவித்துள்ளார். இதன்மூலம் கொரோனா மரணங்களின எண்ணிக்கை 276 அக அதிகரித்துள்ளது. பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார்.அவரது மரணம் கடந்த19 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியாவுடன் நரம்புத் தொகுதியில் ஏற்பட்ட தொற்றினால் அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.