இலங்கையில் கொரோனா நோயாளிகள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள்..!! வெளியான அதிர்ச்சி தரும் புகைப்படங்கள்..!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே இருக்கின்றது.
நாட்டின் பல்வேறுபட்ட நகரங்கள் கிராமங்களிலிருந்தும் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டபோதிலும், அவர்கள் அனைவரும் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றே பராமரிக்கப்படுகின்றார்கள்.
குறிப்பாக சுகாதார ஊழியர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இதன்படி நோயாளர் காவு வண்டிமூலம் அழைத்துச் செல்லப்படும் குறித்த நோயாளர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றபோதும், நோயாளர் காவு வண்டியிலேயே அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
ஆனாலும், கொத்தணிகளாக அடையாளம் காணப்படும் நோயாளர்கள் அதிசொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இதேவேளை அம்பியூலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத இடங்களில் கொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் காட்சியை இங்கு காண்கிறீர்கள்.
இந்தப் படங்களின்மூலம் உணரவேண்டியது யாதெனில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் என்பதேயேகும்.