கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிப்பு..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 335ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் நால்வர் ஏற்கனவே அபாய வலயமாக கருதப்படும் கொழும்பு – 12 பண்டரநாயக்க மாவத்தையில் வசிப்பவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 105ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.