கிளிநொச்சி பூநகரி மண்ணில் குவிந்துள்ள இயற்கை வளத்தைக் கொண்டு தன்னிறைவு உற்பத்தியில் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ஊர் மக்கள்..!!

கிளிநொச்சி எங்கள் சுவாசம்…பூநகரியில் அமைந்துள்ள இயற்கை சார்ந்த உற்பத்தி சார் பொருளாதார தற்சார்பு கிராமங்கள். கிளிநொச்சி மாவட்டத்தின்”பூநகரி பிரதேச”செயலகபிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் காணப்படுகின்ற தன்னிறைவு பொருளாதார”இயற்கை வளம் சார் உற்பத்தி தொடர்பான விஸ்தீரண விளக்கம்.இயற்கை வளங்கள்-பூநகரி பிரதேசமானது கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய “தன்னிறைவு பொருளாதார”உற்பத்தித்திக்கு”முதுகெலும்பாக பங்களிக்ககூடிய தாராளமான இயற்கை வளங்களை கொண்ட கேந்திர அமைவிடமாக காணப்படுகின்றது.அதற்கு பரந்த”நிலப்பரப்பும் வளமான”மண்படுக்கைகள்.குளங்கள், ஏரிகள்,பிறப்பாக்கங்கள்.கடல்கள்.!வயல்கள்”ஏரிகள் காடுகள் மற்றும் இயற்கை”பொருளாதாரத்தை நெறிப்படுத்தும்”சமய”சடங்குகள்”மனித வளநுட்பம் போன்ற இயற்கை கொடைகள் “தரத்திலும், அளவிலும் உற்பத்திக்கு சிறப்பான பேண்தகு நிலையில் காணப்படுப்படுவதுடன்”வினைத்திறனாக” கொண்டு”சென்று பொருளாதார”இயற்கை உற்பத்திகள் வெவ்வேறு”தரப்படுத்தலாக பயன்படுத்தப்படுகின்றது.அதாவது பூநகரி பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த கூடிய வகையில், பொருளாதார இயற்கை வளங்களை மூன்றாக பிரிக்கலாம்?காட்டுசார்”வளம்,நிலம்சார்”வளம்,கடல்சார் வளம்,காட்டுசார்”வளம். பரந்த பிரதேசங்களில் பெருவாரியாக காணப்படுகின்றது நிலம்சார்”வளம்பூநகரி பிரதேசத்தில்”அமைந்துள்ள,நிலம்சார் வளங்களை”கிராமவாசிகள் சமய”சடங்குகளை கொண்டு”விவசாய தொழில்துறை மேற்கொள்ளுகின்றார்கள்.இவ் பிராந்திய விவசாய நடவடிக்கைகளை இரண்டாக பிரிக்கலாம்.பயிர்செய்கை,கால்நடைவளர்ப்பு பயிர்ச்செய்கைபூநகரி பிரதேசத்தில் தற்போது விசாய”தொழில்”துறையில் மரபு பயிர்கள் குறைக்கப்பட்டு நவீனத்துவ மரபுகளை கொண்ட மரக்கறி,பழங்கள், பயன்தரும்”மரங்கள் உற்பத்தியை நோக்காக”அமைத்து பயிர்செய்கையை மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறே பொருளாதார உற்பத்தி துறையைமையப்படுத்தி”நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.பூநகரி பிரதேசத்தில்”பயிர்செய்கை கிராமங்கள்
அரசபுரம் -வாழைதென்னை,அன்னாசி,காய்கறிபிஞ்சுகள்.முழங்காவில்- வாழை,காய்கறிபிஞ்சுகள்,பயன்தருமரங்கள்,ஆங்கில மிளகாய்பிஞ்சு
வெற்றிலை போராட்ட”காலப்பகுதியில்”தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்ட கிராமம், கௌதாரிமுனை,வெட்டுகாடு,கிராஞ்சி,வேரவில்-கால்நடை வளர்ப்புஅதிகமாக”வளர்க்கப்படும் கிராமம்-பொன்னாவெளி,ஜெயபுரம்- நெற்செய்கை புராதன காலம் தொடக்கம் பூநகரி பிரதேசத்தில் நாட்டின்”பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிக்கின்ற முக்கியமான உற்பத்தி பயிர் செய்கையாக”
நெற்செய்கை உள்ளது.மிகப் பரந்த நெற் செய்கை மேற்கொள்ளப்படும் கிராமங்கள்? கறுக்காய்த்தீவு
சித்தன்குறிச்சி,செட்டியகுறிச்சி,பல்லவராயன் கட்டு,கரியாலை நாகபடுபான்,செல்லையாதீவு,சாமிபுலம்,ஆலங்ககேணி
நல்லூர்,முக்கொம்பன் இங்கு பெருவாரியாக விரும்பி பயிரிடப்படும் நெற் பேதங்களாக,பச்சை”பெருமாள் ,மொட்டை கறுப்பன், நாலுமொழி சிவப்பு சம்பா 40−நாள்முதல் 50−60 நாளில் அறுவடை மேற்கொள்ளலாம் போருக்கு பின் ஆட்டக்காரி”என்கிற”நவீனத்துவ மரபுசார்ந்த நெல்”இனம்”கூடுதாலக பயன்பாட்டில் உள்ளது.கடல்சார்”வளம்:பூநகரி பிரதேசத்தில் கடற்றொழில் கரையோரம் சார்ந்த கிராமங்களில் இடம் பெறுகின்றது.நாட்டின் பொருளாதார ஏற்றுமதிக்காக அட்டை பிடித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.கடற்றொழில் பிரதேசங்களாக, பள்ளிக்குடா,நாச்சிக்குடா,வலைப்பாடு
இரைணைதீவு போன்ற இடங்களும்,அட்டை பிடித்தல்- இரைணைதீவு பகுதியிலும் நன்னீர் மீன் பிடி கிராமமாக பல்லவாரயன் கட்டும் காணப்படுகின்றது.நமது நாட்டிற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள”பூநகரி பிரதேசத்தில் உள்ள இயற்கை தன்னிறைவு உற்பத்தி பொருளாதார வளங்களின் பங்களிப்பானது மிகையாகாது.