இலங்கையின் குட்டி லண்டனில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்!!

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனைப் பகுதியில் சிறியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று (22.01.2021) அதிகாலை ரிச்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.