பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி..!! நீதிமன்றம் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை..!!

களுத்துறை – அத்துளுகமையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 2ம் திகதி அத்துளுகமை பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இவர் எச்சில் துப்பியிருந்தார்.இந்நிலையில், பாணந்துறை நீதிமன்றால் இன்று (21) மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.