மகளுடன் வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 விதமான கறி வைத்து அசத்திய மாமியார்..!! கொடுத்து வைத்த மருமகன்!! (இணையத்தில் வைரலாகும் புகைப்படம்)

திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு.அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தடால்புடாலாகவே இருக்கும்.


அந்த வகையில், ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனனுக்கு, மாமியார் படைத்த விருந்து இன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரத்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு மகளுடன் வந்த தனது புதுமாப்பிள்ளைக்கு, மாமியார் 125 வகை உணவுகளை சமைத்து டேபிளில் அடுக்கி உள்ளார்.இந்த வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. அதில் டைனிங் டேபிளில் புதுமாப்பிள்ளை அமர்ந்து இருக்க, அதில் 125 வகையான உணவுகளை சமைத்து மாமியார் அடுக்கி வைத்துள்ளார். 125 வகையான உணவுகளை பார்த்த புதுமாப்பிள்ளை மிகவும் வியந்து போனார்.தனது மனைவியுடன் அமர்ந்தபடியே ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து ருசி பார்த்து சாப்பிடுகிறார். அப்போது புதுமாப்பிள்ளை உணவை ஊட்டிவிட முயற்சிக்கிறார். அதற்கு அந்த புதுப்பெண் வெட்கத்துடன் வேண்டாம் மாமா என்கிறார்.இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும், கிண்டலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில், அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.