நெடுந்தீவுக் கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள்..!!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய படகிலிருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டர் இந்திக டி சில்வா இதனைத் தெரிவித்தார். இந்தச் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.கடந்த 18ஆம் திகதி பின்னிரவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இந்திய மீனவ படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றது.இதையடுத்து இலங்கை கடற்படையின் சூழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து படகில் பயணித்த மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.இச்சம்பவத்தில் கடற்படையின் படகிற்கும் சேதம் ஏற்பட்டது.குறித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.