தற்போது கிடைத்த செய்தி..பூநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா..!!

யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் வடக்கில் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்று 266 பிசிஆர் மாதிரிகள் யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டன.

இதில் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பூநகரியில் அடையாளம் காணப்பட்ட 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.நல்லூரில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர், யாழ்ப்பாண பல்கலைகழக மாணவி. மாத்தளையை சேர்ந்த அவர், முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வருகிறார்.