இந்த வடிவிலுள்ள ஆஞ்சநேயப் பெருமானை வணங்கி வந்தால் உங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறுமாம்..!!

ஆஞ்சநேயரை வணங்கினால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ஆஞ்சநேயரின் சில வடிவங்களை வணங்கினால் அதற்கு ஏற்ற பலன்கள் நமக்கு கிடைக்கும். ஆஞ்சநேயர், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. எந்த வடிவ ஆஞ்சநேயரை வணங்கினால் என்ன கிடைக்கும் என்பதை பார்ப்போம்.வீர ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.யோக ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.பக்த ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.சஞ்சீவி ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் நோய் நொடிகள் விலகும்.