கிழக்குப் பல்கலைக்குள்ளும் நுழைந்தது கொரோனா..04 மாணவிகளுக்கு தொற்று உறுதி..!!

மட்டக்களப்பு – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 04 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பெண் மாணவர்களுக்கே இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.மேலும் அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்போது பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.