புதிய ஜனாதிபதியாக தனது கடமைகளை வெள்ளைமாளிகையில் ஆரம்பித்தார் ஜோ பைடன்!! உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து!

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன் ஒவல் அலுவலகத்தில் தனது அலுவல்களை ஆரம்பித்தார்.அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி கமலா ஹாரிசும் நேற்று பதவியேற்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தனது பதவிக் காலத்தின் முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.வெள்ளைமாளிகையில் ஜனாதிபதியின் அறையிலிருந்து, ஜோ பைடன் தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, பார்வையிட்டார்.பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பைடன் கையெழுத்திட்டார்முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், “நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, ஜனாதிபதி அலுவலகமான ஓவல் அலுவலகம் செல்கிறேன். அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பராக் ஒபாமா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “ எனது நண்பர் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள்! இது உங்கள் நேரம்” என தெரிவித்துள்ளார்.