இலங்கை வாழ் சாரதிகளுக்கு மிக முக்கியமான தகவல்..03 மாத கால அவகாசம்..!!

01/07/2020 தொடக்கம் 31/03/2021 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களை முடிவு திகதியில் இருந்து 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது.கொரோனா பரவல் காரணமாக, முதன்முறையாக, கடந்த ஆண்டு மார்ச் 16 முதல் ஜூன் 30 வரை காலாவதியான அனைத்து சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் கடைசி நாளிலிருந்து ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.அதன்பிறகு இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த காலகட்டத்தை 03 மாதங்களுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.சாரதி உரிமம் காலாவதியானால், நரஹன்பிட்ட தலைமை அலுவலகம் அல்லது பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளித்து செய்து சாரதி உரிமத்தை புதுப்பிக்க இன்னும் வாய்ப்பு உள்ளது.