திருமணத்திற்கு சில நாட்களேயுள்ள நிலையில் யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்..!! செய்வதறியாது திகைத்து நிற்கும் பெற்றோர்கள்..!!

மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றள்ளது. கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6 வயது மகனும் தமது சொந்த இடமான பருத்தித்துறைக்கு அண்மையில் சென்றிருந்தனர்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இரண்டு தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான யுவதிக்கு நாளை மறுநாள் (23) திருமண திகதி நிச்சயிக்கப்பட்டிருந்தது.
எனினும், கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என்ற அடிப்படையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த திடீர் விபத்து சம்பவத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை அந்த தினத்தில் நடத்த முடியாத நிலையேற்பட்டு, திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு குடும்பங்களும் நிலைமையை புரிந்து புதிய திகதியை தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.