கடைசி நேரத்திலும் அடங்க மறுத்த ட்ரம்ப்..!! மாளிகையிலிருந்து முன்னதாகவே வெளியேறி சம்பிரதாயத்தை உடைத்தார்..!!

டொனால்ட் ட்ரம்ப் சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதிபர், பதவியிலிருந்து இறங்கும் நேரத்திலும் அமெரிக்காவை பதற்றத்தோடே வைத்திருக்கிறார்.

அமெரிக்க அதிபராக, இன்று ஜோ பைடன் பதவியேற்கிறார். இதையடுத்து பதவி விலகும் அதிபர் வெள்ளை மாளிகையிலிருந்து குடும்பத்தோடு விமானத்தில் வெளியேறுவது மரபு.டிரம்ப் பதவியேற்ற நாளில், பராக் ஒபாமா ஸ்பெஷல் ஏர் மிஷன் 44 என்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.பொதுவாக இந்த விமானத்தில்தான் மாஜிக்கள் கிளம்புவார்கள். ஆனால், டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையிலிருந்து, தனது மனைவி மெலினா டிரம்ப்புடன், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.அதிபர் பயணிக்கும் விமானத்திற்குத்தான் அந்த பெயர் உண்டு. எனவே அதிபராகவே வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் கிளம்பிச் சென்றுள்ளதாகத்தான் அர்த்தம். வெள்ளை மாளிகையிலிருந்து முன்கூட்டியே டிரம்ப் கிளம்பியதால், அதிபராகவே அங்கிருந்து கிளம்பியுள்ளார். எனவேதான் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சென்றார் என்கிறார்கள்.புதிய அதிபர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார் டிரம்ப்.இது அமெரிக்க வரலாற்றில் அரிதிலும் அரிதான நிகழ்வு. இப்போது அதிபர் விமானத்திலும் ‘அப்பீட்’ ஆகியுள்ளார். இதுவும் வழக்கமான நடைமுறை கிடையாது.இதற்கிடையே அமெரிக்க வரலாற்றில் இதுவரை பதவி மாற்றம் சுமூகமாகவே நடந்துள்ளது. பதவி மாற்றத்திற்கான பராம்பரிய பழக்கமும் உள்ளது. பதவி ஏற்பு அன்று காலை வெளியேறும் அதிபர்,புதிய அதிபரை வரவேற்பார். புதிய அதிபர் அவரது மனைவி ஆகியோர் வெளியேறும் அதிபர் குடும்பத்தினருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிடுவர். இரு குடும்பத்தினரும் இணைந்து பதவி ஏற்பு விழா நடக்கும் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள்.இந்த நடைமுறையின் படிதான் இதுவரை சுமூகமாக பதவியேற்பு விழா அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இப்படி பதவியேற்பு விழா நடைபெறுவது தான் அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்று ஆகும்.இந்த கண்ணியத்தை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி தலைவர்கள் காப்பாற்றி வந்தார்கள். ஆனால், இந்த கண்ணியத்தை டிரம்ப் மீறி உள்ளார். காலையிலேயே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப், குடும்பத்துடன் தனது சொந்த ஊரான புளோரிடாவுக்கு குடிபெயர்கிறார்.