திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் இலங்கையில்.? பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..!!

திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே, திரிபடைந்த வைரஸ் பற்றிய தகவல்கள் குறைந்தளவிலேயே மக்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.அதன் இயல்புகள் குறித்து மிக தாமதமாகவே அறிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.நாக்கு மற்றும் தோலில் சிவப்பு கொப்புளங்கள், காயங்கள் ஏற்படுவதும் உருத்திரிபடைந்த வைரஸின் இயல்புகள் என எச்சரித்தார். இத்தகையை அறிகுறிகளை கொண்டிருந்த எவரும் பரிசோதனைக்குள்ளாகும்படி கேட்டுக் கொண்டார்.நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 40 பேருக்கும் அதிகமானவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் எந்தவகையான வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது தெரியவிலிலையென குறிப்பிட்டார்.