தற்போது கிடைத்த செய்தி..தேசியப் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் பல பணியாளர்களுக்கும் கொரோனா..!!

தேசிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் பல பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.ராஜாங்க அமைச்சின் அறிக்கை ஒன்றின்படி விசாரணைப்பிரிவின் 6 பணியாளர்களும், இரண்டு சாரதிகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து ராஜாங்க அமைச்சின் விசாரணைப்பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இதேவேளை ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன உட்பட்டவர்களின் செயலாளர்கள் மற்றும் நெருங்கிய பணியாளர்கள் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.