இலங்கையில் எல்லைமீறிப் போன கொரோனா!! கையை விரிக்கும் சுகாதார ஆய்வாளர்கள்..!! எதிர்வரும் வாரங்களில் இலங்கையின் நிலை..??

கொரோனா பரவல் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தவறான செய்திகளை வழங்கி வருகின்றனர். எனவே, அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தொற்று கணிசனமான அளவில் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்;
பண்டிகை காலங்களில் அதிக ஆபத்துள்ள இடங்களை முடக்குமாறு அல்லது தனிமைப்படுத்துமாறு சுகாதார ஆய்வாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியபோது அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை.
இப்போது நிலைமை கிட்டத்தட்ட எல்லை மீறிவிட்டது.எனினும், இதற்கான விலையை பொது மக்களே செலுத்த வேண்டும்.எனவே, பொது மக்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மேல் மாகாணத்தில் மட்டுமே வரையறுக்கப்பட்ட கொரோனா தொற்று இப்போது திருகோணமலை, காலி, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மற்றும் புத்தளம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பரவியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.இது இலங்கையில் கொரோனா தொற்று சமூக பரிமாற்ற நிலையை எட்டியுள்ளது என்பதற்கான அறிகுறியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இதற்கிடையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஏனைய அதிகாரிகள் நாட்டின் கொரோனா நிலைமை குறித்த தவறான அரசியல்வாதிகளுக்கு வழங்கியுள்ளனர்.இந்த அதிகாரிகள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதுபோன்ற தவறான விவரங்களை வழங்குகிறார்கள்.எவ்வாறாயினும், நாட்டின் உண்மையான கொரோனா நிலைக் குறித்து அரசியல்வாதிகளை எச்சரிப்பது அவர்களின் கடமையாகும் என்று உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.