தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களிடம் விடுக்கப்படும் முக்கிய கோரிக்கை!

இலங்கையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவுகை காரணமாக இலங்கை நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் சலுகைக் காலத்தை வழங்கியுள்ளது.எனவே இந்த சலுகைக் காலத்தை வாடிக்கையாளர்கள் மிகவும் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டுமென இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கோரியுள்ளது.கட்டணங்களைச் செலுத்துவதற்கு அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைக் காலத்தை வழங்கியுள்ளது.இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் முடிந்தளவு தங்களது கட்டணங்களை இணையத்தின் ஊடாக செலுத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.