தோட்டத்தில் இரகசியமாக நுழைந்து தேங்காய் பறித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

கம்பஹாவில் தேங்காய் ஒன்றை திருடிய நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்து தேங்காய் ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் போது குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மல்வத்துஹிரிபிட்டிய, நீலம்மஹர பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.