பதவியிலிருந்து வெளியேறும் நேரத்திலும் புத்தியைக் காட்டும் ட்ரம்ப்..!! ஜோ பைடனுக்கு விமானத்தை கொடுக்க மறுத்ததால் பெரும் சர்ச்சை..!!

இன்னும் சில மணி நேரங்களில் எல்லாம் அமெரிக்க அதிபர் என்ற பதவியை இழக்க உள்ள ரம், கடைசி நேரம் வரைக்கும் கூட சில கேவலமான விடையங்களை செய்து வருகிறார்.

பதவி ஏற்ப்பு விழாவுக்கு ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருவதற்கு அரசாங்க விமானத்தை கொடுக்க ரம் நிர்வாகம் தடை போட்டுள்ளது. இதனால் தனது சொந்த பணத்தை கட்டி, தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வாஷிங்டன் DC வந்துள்ளார் பைடன்.
அங்கே பேசிய அவர் தனது மகன் தான் பதவிப் பிரமாணத்தை எடுக்கும் போது பார்க்க உயிரோடு இல்லை என்று கூறி மக்கள் முன் கண் கலங்கினார். ஜோ பைடனது மகன் பியூ, சில வருடங்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக இறந்து பெரும் சோகத்தை கொடுத்துச் சென்றுவிட்டார். கூடி இருந்த மக்களை ஜோ பைடன் பேச்சு நெகிழவைத்துள்ளது.அனைவரும் ஓசை படாமல் அவரது உரையை கேட்டுக் கொண்டு இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.இது இவ்வாறு இருக்க கஷ்டத்தில் இருக்கும் ஒவ்வொரு அமெரிக்க குடி மகனுக்கும் 1,400 டாலர்களை உடனடியாக வழங்கப் போவதாக ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார். இது மக்களால் பெரிதும் வரவேற்க்கப்பட்டுள்ள விடையமாக பார்கப்படுகின்றது.