பொதுமக்களே உஷாராகுங்கள்..உங்களின் சாதாரண பழக்கவழக்கங்கள் கூட கொரோனாவை வரவழைக்குமாம்..!!

இன்று உலக வல்லரசு நாடுகளையே ஆட்டங்காண வைத்து கொடிய தொற்றுநோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல உலக நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவதோடு, ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது. மேலும், மக்களை வீட்டிலேயே இருக்க வைத்துள்ளது. அதோடு சுத்தமாக இருக்கவும் பரிந்துரைக்கிறது.இருப்பினும் நம்மிடம் உள்ள பல பழக்கங்கள் வைரஸ் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது அந்தப் பழக்கங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

கைவிரல் நகங்களில் ஏராளமான கிருமிகள் இருக்கும். பலருக்கும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி கிருமிகள் நிறைந்த கைவிரல் நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.இந்த காலத்தில் கடித்தால், பின் அந்த வைரஸ் உடலினுள் எளிதில் நுழைந்துவிடும்.முகத்தில் நீக்க பலரும் அந்த பருக்களை கிள்ளி பிய்த்தெறிய முயற்சிப்பார்கள். ஆனால், இப்படி செய்வது முகத்தில் பருக்களை அதிகம் வரவழைப்பதோடு, கொரோனா வைரஸ் தாக்கத்தையும் அதிகரித்துவிடும்.அடிக்கடி தலைமுடியைத் தொடாதீர்கள். அப்படியே தொட்டாலும், உடனே கைகளை நன்கு நீரில் கழுவிவிடுங்கள்.ஏனெனில் கைவிரலால் முடியைத் தொடும் போது, தலையில் உள்ள அழுக்கில் இருக்கும் பக்டீரியாக்கள் கைவிரலில் ஏறி, பின் எதிர்பாராத தீங்கை உண்டாக்கிவிடும்.வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் உடுத்தும் உடைகளை மாற்றிவிடுவதோடு, டவல் மற்றும் படுக்கை அறையில் உள்ள விரிப்பு மற்றும் தலையணை உறையை வாரத்திற்கு 2-3 முறை துவைத்து வெயிலில் உலர்த்துங்கள்.உண்ணும் உணவுப் பொருள் மற்றும் நீர் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.நீங்கள் கண்களை அடிக்கடி தொடுபவராக இருந்தால், உடனே அந்த பழக்கத்தைக் கைவிடுங்கள். ஏனெனில் வைரஸானது கண்களின் வழியாக உடலுக்குள் நுழைந்து உடலை மோசமாக பாதிக்கலாம்.இரவு நீண்ட நேரம் டிவி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும்.