அனைத்து ஊழியர்களுக்கும் ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..அமைச்சரவையின் அதிரடித் தீர்மானம்..!!

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிபிட்டுள்ளார்.அதற்கமைய குறைந்தபட்ச சம்பளத்தை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.இதற்கு மேலதிகமாக மேலும் சில சட்டமூலங்களின் திருத்தங்கள் தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.அதற்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.