வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா- பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் அப்பகுதியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று வெளியாகியது.அதனடிப்படையில், அப்பகுதியை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய வவுனியாவில் இதுவரை 222 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.