தற்போது கிடைத்த செய்தி..பசறையில் இரு பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பசறை நகரிலுள்ள பாடசாலையொன்றில், இரண்டு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.


சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக தயாராகி வந்த இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களுடன் தொடர்பைப் பேணி வந்த 78 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பசறை அம்மனிவத்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.