இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா!!

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.


பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, பாலர் பாடசாலைகள், ஆரம்ப கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு இராஜபங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தான் தொற்றிற்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சுகாதார விதிமுறைகளின்படி சிகிச்சை மையம் செல்வதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை சோதனைக்குள்ளாகும்படியும் கேட்டுள்ளார்.அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை தொடர்ந்து, நான்காவது நாடாளுமன்ற உறுப்பினராக பியல் நிஷாந்த தொற்றிற்குள்ளாகியுள்ளார்.இதே வேளை  கொரோனா தொற்றிற்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்புபட்டிருந்ததால், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.பீரிஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திட்டம் மற்றும் இலங்கைக்கு தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்தும் நடந்த கூட்டத்திலும் கல்வி அமைச்சர் இன்று கலந்து கொண்டிருந்தார்.