இலங்கைக்கு படையெடுக்கப் போகும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தயாராகும் நட்சத்திர ஹொட்டல்கள்..!!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக 55 ஹோட்டல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் 21 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடத்திற்காக இந்த 55 ஹோட்டல்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.சினமன்ட் ஹோட்டல், தாஜ், ஜெட்விங், சிட்ரஸ் ,அமயா மற்றும் ஹெரிடன்ஸ் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் சில ரிசார்ட்டுகள் உட்பட, அனைத்து ஹோட்டல்களும் கொழும்புக்கு வெளியே அமைந்துள்ளன.ஹோட்டல்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படும் காலத்தில், உள்ளூர் மக்கள் குறித்த ஹோட்டல்களில் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் லெவல் 1 சான்றளிக்கப்பட்டு ‘பாதுகாப்பானவை’ என வரையறுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டுமே செயல்படும்.