கொரோனாவை ஒழிக்க இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளிற்கு இந்தியா வழங்கப் போகும் வெகுமதி!!

இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான கொள்கையை வகுக்கும்போது, ​​அதன் அண்டை நாடுகளுக்கு 20 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸுக்கு சப்ளை செய்வதற்காக ஒரு இந்திய அரசு நிறுவனம் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நஷனல் லிமிடெட் ஆகியவற்றிலிருந்து தடுப்பூசிகளை வாங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த திட்டம் இன்னும் விவாதத்தில் உள்ளது. சில பொருட்கள் இலவசமாகவும் உதவியாகவும் கருதப்படலாம். அடுத்த இரண்டு வாரங்களில் தடுப்பூசிகளின் முதல் தொகுதி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் உள்ள நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை இந்திய அரசாங்கம் வழங்கும்.தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நாடுகளுக்கு உதவுவதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தலைமையை நிறுவவும், தெற்காசிய வட்டகையில் போட்டியாளரான சீனாவிற்கு எதிரான தனது பிடியை இறுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார்.இந்தியத் தடுப்பூசியை பிரேசில், தென்னாபிரிக்கா ஆகியன உடனடியாக கொள்வனவு செய்கின்றன.சீரம் நிறுவனம் தென் அமெரிக்க நாட்டிற்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும்.