இலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்..!! 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்!!

இலங்கையில் 27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, நேற்று மாத்திரம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 749 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது. 7,627 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.