தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்த தமிழ் மருத்துவர்.!! முல்லையில் பெரும் சோகம்..!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

36 வயதான செல்வராஜா ராஜகரன் என்பவரே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, நட்டாங்கண்டல், தேவிபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் வைத்தியராகப் பணிபுரிந்தவர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்