குடும்பத் தகராறினால் வந்த வினை..மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கணவன்..!!

கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் கணவனால் மனைவி வெட்டி படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டு முரண்பாடு முற்றிய நிலையில்
மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டி படுகொலை செய்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் மூன்று
பிள்ளைகளின் தாய் ஆவார். இச்சம்பவம் நேற்றுப் (17) பிற்பகல் இரண்டு
மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரை பகுதியைச் சேர்ந்த டேவிட் ரூபன் கீதா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை பூநகரி பொலீஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.