மாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..!!

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, உரிய மேலதிக வகுப்புகள் நடத்தப்படும்‌ இடத்தில்‌ இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பேணி மாணவர்கள் கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளக்‌ கூடிய ஆகக்‌ கூடிய மாணவர்களின்‌ எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.எனினும், 100 மாணவர்களுக்குக் குறைவான இட வசதியைக் கொண்ட இடங்களில் வழமையாக வகுப்பில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையில்‌ 50 வீதமான மாணவர்களுக்கு மாத்திரம்‌ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் இரு வாரங்களின் பின்னர், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதென தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.