தனது போற்றத்தக்க மனிதாபிமான செயற்பாடுகளினால் உலகின் அதி உயர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மருத்துவர்..!!

ஸ்கொட்லாந்தின் தேசிய கவிஞர் றொபேட் வென்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதிற்கு இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் வரதராஜா துரைராஜா உட்பட மூவர் இம்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்க்காலில் மூன்றரை லட்ஷம் தமிழ் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவத்தின் கோர தாக்குதலுக்குள்ளான போது, எந்த வித வசதியுமில்லாத நிலையிலும் உயிரை பொருப்படுத்தாமல், மருத்துவ சேவையாற்றி பலரது உயிர்களை காப்பாற்றினார் வரதராஜா துரைராஜா அவர்கள். மேலும் முள்ளிவாய்க்கால் தாக்குதல் குறித்து இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கிக்கூறி, எத்தகைய அவலம் நடைபெற்றதென்பதை உலகத்திற்கு அவர் எடுத்துரைத்தார்.இந்நிலையிலேயே, தற்போது அமெரிக்காவில் பணியாற்றிவரும் வரதராஜா அவர்களின் பெயர் றொபேட் வென்ஸ் மனிதநேய விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இம்மாத கடைசியில் விருது அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.