அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி..இன்னும் 14 நாட்களில் கிடைக்கப் போகும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.!!

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல.இந்த தொற்றினால் நாளாந்தம் பலர் கண்டு பிடிக்கப்படுவதுடன்,உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

இந்த வகையில் குறித்த தொற்றை உலகிலிருந்து முற்றாக அழிக்கும் வகையில் தடுப்பூசியை பல நாடுகள் கண்டு பிடித்துள்ளன.அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி இன்னும் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று தடுப்பூசி இலங்கைக்கு கிடைத்துவிடும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.ஔடத தரக்கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.இரண்டு விதமான தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பைஸர் மற்றும் எக்ஸ்ராசெனிகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளே அவை எனக் கூறிய இராஜாங்க அமைச்சர், இரண்டு வாரங்களில் அவற்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.