தமிழர் தலைநகரில் மாஸ்டர் படம் பார்க்கச் சென்றவருக்கு கொரோனா..!! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!! தியேட்டர்களில் காலியாகும் இருக்கைகள்.!

திரையுலகில் தைத்திருநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெகு விமர்சையுடன் வெளியிடப்பட்டது.

தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் மாஸ்டர் படம் பார்ப்பதற்காக முண்டியடித்துச் சென்றனர்.அதன்படி இலங்கை, இந்தியா,உட்பட பல நாடுகளில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டது.இந்த நிலையில், திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்க்க சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கொரோனா அச்ச நிலையிலும் திரையரங்குகளில் உள்ள இருக்கைகள் இடைவெளி காணப்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.