ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சகாதார வழிகாட்டலுக்கமைய தூரப் பிரதேசங்களுக்கான ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்களில் வியாபார நடவடிக்கைகளை யாசகம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதென்றும், ரயில்வே திணைக்கள பொது முகாமையாளல் டிலன்த பெர்னாண்டோ தெரிவித்தார்.அதற்கிணங்க, கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான உத்தரதேவி ரயில் கொழும்பு- பதுளைக் கிடையிலான பொடிமெனிக்கே ரயில் சேவை கொழும்பு கோட்டை முதல் கண்டி வரையான ரயில் சேவைகள் மருதானை முதல் பெலியத்தை வரையிலான ரயில் சேவைகள் மற்றும் மாத்தறை கொழும்பு ரயில் சேவைகளும் இடம்பெறும்.அதைத் தவிர எதிர்வரும் 02ஆம்திகதி வரை ஏனைய அன்றாட ரயில்சேவைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில ரயில் சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.