தற்போது கிடைத்த செய்தி.. இனி வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லையாம்..!! சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்பு!!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், அதனை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இன்று சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டதாக கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அவசர தேவை ஏற்பட்டால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் எனவும் திரு.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.