நிபா வைரஸ் தாக்கம் குறித்து இலங்கையில் தீவிர கண்காணிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

பிற நாடுகளில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதாக பொதுச் சுகாதார சேவைகளின் துணைப் பொதுப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை.ஆனால் நாங்கள் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.