இலங்கையில் தீவிரம் பெறும் கொரோனா..வடமராட்சி வானில் பறந்த கொரோனா பட்டம்..!!

வடமராட்சி வல்வெட்டித்துறை மதவடி உல்லாசக் கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமாக பட்டத் திருவிழா நடைபெறும் இந்த வருடம் கொரோனா காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி பட்டப்போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கையில் பட்டம் விடும் நிகழ்வு அங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதற்கு பல விதமான பரிசில்களும் வழங்கப்படும்.தைப்பொங்கல் அன்று பட்டமேற்றும் நிகழ்வு வழமையாக நடைபெறும்.

 

இன்று பட்டம் விடும் நிகழ்வு நடைபெறாததோடு ஒரே ஒரு பட்டம் மட்டும் பறக்கவிடப்பட்டது.அதாவது கொரோனா விழிப்புணர்வு பட்டம் ஒன்று விடப்பட்டுள்ளது.இது பொதுமக்களுக்கு விழிப்புணர்விற்காகவே ஏற்றப்பட்டுள்ளது.