இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இரு பொலிஸார் அதிரடியாகக் கைது!!

இலஞ்ச குற்றச்சாட்டில் இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய, மாத்தறை பகுதிகளில் நடததப்பட்ட விசேட நடவடிக்கைகளில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இலஞ்சம் கோரிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.இலஞ்சம் அல்லது ஊழலுடன் தொடர்புபட்ட கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திணைக்களம் தயங்காது என்றும் பொலிஸ் பேச்சாளர் எச்சரித்தார்.