நேருக்கு நேர் மோதிய இரு பாரிய வாகனங்கள்..இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து..!! பத்து பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாகப் பலி!!

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும் டெம்போ வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பத்து பெண்களும் டேம்போ வாகனத்தின் சாரதியும் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்கள் தாவங்கேரில் உள்ள ஒரு மகளிர் கிளப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக தார்வாட் வழியாக கோவாவை சென்றடைய முற்பட்டபோதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.காயமடைந்தவர்களில் சிலர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தினையடுத்து பைபாஸ் நெடுஞ்சாலை பாரிய போக்குவரத்து நெரிசாலை எதிர்கொண்டது.விபத்தில் சிக்கிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின.