பிறேசில் காட்டில் உருவாகிய கொடிய கொரோனா வைரஸ் 3.0 !! உருமாறி லண்டனுக்குள் ஊடுருவியது எப்படி.? அனைத்தும் லொக் டவுண்.!!

இந்த வருடம் கூட கொரோனா தீராது போல உள்ளது. பிரேசில் நாட்டில், ஒரு மிருகத்திற்கு தொற்றி. அதனூடாக உருமாறி சக்தி வாய்ந்த ஒரு கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. அது சரி பிரேசிலில் தானே என்று பிரித்தானியா அசட்டையாக இருந்துவிட்டது.ஆனால்,அந்த குறித்த உருமாறிய வைரஸ் எப்படியோ லண்டனிலும் தற்போது பரவ ஆரம்பித்து விட்டது. இதனால், தென் அமெரிக்க நாடுகளான சுமார் 15 நாடுகளை பிரித்தானியா சற்று முன்னர் தடை செய்துள்ளதோடு, போர்த்துக்கல் நாட்டையும் தடைசெய்துள்ளதாக தெரியவருகின்றது.
ஐரோப்பிய நாடான போத்துக்கல்லில் பிரேசில் கொரோனா கடுமையாக பரவி வருகிறது. இதனால், அந் நாட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்யவேண்டாம் என்று பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், மேற்படி 15 தென் அமெரிக்க நாட்ட்டு பொருட்களையும் பிரித்தானியா தடைசெய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.தற்போது பிரித்தானியாவின் தென்னாபிரிக்க உருமாறிய கொரோனா தாக்கி வருகிறது. இது போதாது என்று பிரேசில் நாட்டு கொரோனா வேறு தாக்க ஆரம்பித்துள்ள விடயம் பிரதமர் பொறிஸ் ஜோன்சனை புரட்டி எடுக்கும் பேராபத்தாக உருவாகின்றது.

Source: Sky News: Ban on all arrivals from 15 South American countries and Portugal over Brazil variant.