மட்டு நகரில் கோர விபத்து..வேகக் கட்டுப்பாட்டையிழந்து கடைகளுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்!! பழம் வாங்கிக் கொண்டிருந்த பிரதேச செயலக உத்தியோகஸ்தர் பரிதாபமாகப் பலி..!!

களுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காரைதீவுப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவருகின்றது.மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் ஒருவரை மோதி, ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவரையும், கடை உரிமையாளரான பெண்ணையும் மோதியது.அந்தக் கடையை உடைத்துக் கொண்டு அடுத்த கடைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் அந்த கடையில் ஒருவரையும் மோதியது. மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்தார்.காயமடைந்த ஐந்து பேரும் வைத்தியசாலையில் நால்வர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த, காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான கருணாகரன் உதயன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.மேலும், காயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.