அடை மழை வெள்ளத்தின் மத்தியிலும் சூரியனுக்கு பொங்கிப் படைத்து வழிபட்ட மக்கள்!!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் மற்றும் காணிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்றையதினம் உலக வாழ் தமிழ் மக்கள் தை்திருநாளை கொண்டாடி வரும் நிலையில் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் தைத்திருநாளை கொண்டாட முடியாது அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இதேவேளை, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புலோப்பளை மேற்கு சிந்தாத்திரை மாதா தேவாலயத்தை சூழ வெள்ள நீர் உட்புகுந்துள்ள நிலையிலும், நீரின் மேல் கற்களை அடுக்க தகரங்கைள வைத்து சூரியனுக்கு பொங்கல் பொங்கிப் படைத்து வழிபட்டனர்.